சனி, 9 மே, 2015

ஏமாற்றம் எங்கள் பிறப்புரிமை

பல ஆண்டுகளாக தமிழகத்திலும் இன்னும் பல மாநிலங்களிலும் நிகழும் பொருளாதார குற்றங்களில் மிக முக்கியமானதும், நடுத்தர மற்றும் அடித்தட்டு மக்களை நேரடியாக பாதிப்பதும் நிதி நிறுவன மோசடிகள் மற்றும் , தங்கம், தேக்குமரம், ஈமு, நாட்டுக்கோழி போன்ற முதலீட்டு நிறுவன மோசடிகள்,

இந்திய ரிசர்வ் வங்கியில் நிதி நிறுவனம் என்று பதிவே செய்யாமல் , இந்திய அரசின் தொழில் முதலீட்டு துறையில் வேறு ஏதேனும் நிறுவனம் என்று பதிவு ச
ெய்துவிட்டு "அரசு அங்கீகாரம் பெற்ற நிறுவனம்" என்று விளம்பரம் செய்து ( எவன் குடி நாசமா போனா என்ன ,,,, எனக்கு சம்பளம் கொடுத்தாய்ங்க.. நான் நடிச்சேன் என்று விளம்பர விபச்சாரம் செய்யும் நடிகர்கள் வேறு இதற்கு உடந்தை ) அப்பாவி மக்களை ஏமாற்றி நம்பவைத்து கழுத்தறுக்கும் தொழில் முதலைகளிடம் ஏமாறுகிறார்கள் அப்பாவி நடுத்தரவர்க்க பொதுஜனம்.

ஆனால் அப்படி ஏமாற்றப்பட்டதை உணர்ந்து காவல் துறை ஆணையர் அலுவலகத்தை முற்றுகை இடுவர் இந்த அப்பாவி பொது ஜனம்...
இவர்களை ஏமாற்ற இன்னொருவன் கிளம்பி வருவான் பாருங்கள்... அட அட அட.... உடனடியாய் அங்கே ஒருவன் ஆரம்பிப்பான்.."ஈமு கோழியால் ஏமார்ந்தோர் சங்கம்" என்று... அதற்க்கு தலைமை பொறுப்புக்கு ஒரு "நல்லவர் (??)" கிளம்பி வருவார்..
வசூல் வேட்டையை தொடங்குவார்... விட்டத்த புடிக்கணும் என்று அந்த அப்பாவி ஜனம் வழக்கு நடத்த ஒரு தொகையை இழக்கும்...

இது போன்ற ஏமாற்று நிறுவனங்கள் ஒரே இரவில் ரகசியமாய் ஆரம்பிக்கப்பட்டு இரவோடு இரவாக வசூல் செய்வதில்லை.. அதற்கு ஒரு அலுவலகம், தொலைகாட்சி, பத்திரிகை விளம்பரங்கள் எல்லாம் செய்து தான் முதலீட்டாளர்களை கவர்கிறார்கள். அப்போதே அரசுத்துறை தலையிட்டு அந்த நிறுவன கணக்குகளை சரி பார்த்தால் முதலீட்டு ஆசை கொண்ட நடுத்தர வர்க்கம் ஏமாறுவதையும்.. அதனால் நிகழும் சில பல தற்கொலைகளையும் , இதனால் ஏற்படும் சட்டம் ஒழுங்கு பிரச்சினைகளையும் வராமலே தடுக்கலாம்..

ஆனால் இதெல்லாம் இந்தியாவில் கனவில் மட்டுமே சாத்தியம்..

அட மக்களே... நீங்க எப்போதான் ஏமாறாம இருக்க போறீங்களோ...!!!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக