சனி, 9 மே, 2015

சில ரகசியங்கள்

ஒரு முடி திருத்துபவர் அந்த நாட்டின் மன்னனுக்கு முடி திருத்தம் செய்ய சென்றார்.. கதவுகள் மூடப்பட்ட ஒரு அறைக்குள் உட்கார்ந்திருந்தார் மன்னர். காத்தோட்டமாய் வெளியே இருக்கலாமே என்றதற்கு மறுத்து விட்டார்.. காரணம் மன்னரின் காதுகள் கழுதைக்காது போல் நீளமாய் இருக்கும்.. இந்த ரகசியம் காக்கவே இந்த ஏற்பாடு.. 

ஆனால் அந்த முடி திருத்துபவனுக்கோ ரகசியம் காக்க தெரியாது.. அதே நேரம் இது ராஜ ரகசியம்.. வெளியில் சொன்ன
து தெரிந்தால் தலையை கொய்து விடுவார்கள்.. எனவே ஒரு குழி வெட்டி அந்த குழிக்கும் சொன்னான் "ராஜா காது கழுத காது.." பிறகு அந்த குழியில் ஒரு செடியை நட்டு தண்ணீர் ஊற்றினான்.. நாளடைவில் அது ஒரு பெரிய மரமாக வளர்ந்தது... 
ஒரு தவிலிசை கலைஞர் ஒரு ஆசாரியுடன் வந்து அந்த மரத்தை வாங்கி சென்றார்.. தவில் செய்வதற்காக... தவிலும் தயாரானது.. அதனை வாசிக்கும் பொது ஒரு வினோத சத்தம் வந்தது... ஹா ஹா ஹா.. அதே தான்... "ராஜா காது கழுத காது... ராஜா காது கழுத காது... "

ரகசியம் காக்க தெரியாத அந்த முடி திருத்துபவன் குழிக்குள் சொன்னது மாதிரி... நம்மில் நிறைய பேர் ஃபேஸ்புக்கிலும்  , ட்விட்டரிலும்  ஸ்
டேடசாய் சொல்லிவிட்டு போகிறோம்...

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக