சனி, 9 மே, 2015

பதினேழாவது தலைமுறை

ஒரு மன்னன் தன்னுடைய கணக்குபிள்ளையிடம் விசாரித்தான்.. நமக்கு எவ்வளவு சொத்து இருக்கும்... ?? பதினாறு தலைமுறைக்கு உட்கார்ந்தே சாப்பிடலாம் மன்னா... கணக்கு பிள்ளை பதில் சொன்னார்.. மன்னன் கவலையில் ஆழ்ந்தான்.. ஐயோ... என்னுடைய பதினேழாவது தலைமுறை என்ன ஆகும்...?? இப்படியான கவலையில் மிகவும் நோய் வாய் பட்டான்... ஊரில் உள்ள அனைத்து மருத்துவர்களும் தருவிக்கப்பட்டு மருத்துவம் செய்தும் நோய் குணமாகவில்லை... 
ஒரு யோகி அவ்வூருக்கு வந்தார்.. அவர் இந்த விஷயத்தை கேள்விப்பட.. மன்னனை சந்தித்தார்... மன்னா.. உன்னுடைய நாட்டில் இருக்கும் ஓரிரு பச்சிளம் குழந்தைகளுடன் கூடிய இளம் விதவையை தேடி கண்டு பிடி..முக்கியம்.. அவள் தினசரி கூலி வேலைக்கு போய்தான் சாப்பிட வேண்டிய நிலையில் இருக்க வேண்டும்... இரண்டு வண்டிகள் நிறைய உணவு தானியங்களை அனுப்பு.. அப்புறம் என்னிடம் வா.. உன்னுடைய வியாதிக்கு நான் மருந்து தருகிறேன் என்றார்... மன்னனும் அவ்வாறே செய்ய..
தன்னுடைய வீட்டு முன் இரண்டு வண்டிகள் வந்து நிற்பதை பார்த்த அந்த இளம் விதவை என்னவென விசாரித்தாள்... மன்னன் உணவு தானியங்கள் அனுப்பியதை சேவகன் சொல்ல... தன்னுடைய மகளிடம் " நம் வீட்டில் அரிசி பானையில் எவ்வளவு அரிசி இருக்கிறது என பார்க்க சொன்னாள்... இரண்டு மூன்று நாளைக்கு சமைக்கலாம் அம்மா... சிறுமியின் பதில்... உடனே அந்த இளம் விதவை.. வண்டிக்காரர்களிடம் சொன்னாள்.. எங்களுக்கு மூன்று நாட்களுக்கு உணவு இருக்கிறது.. இப்போதைக்கு போதும்.. தேவைப்பட்டால் நாங்களே கேட்கிறோம்.. என அந்த வண்டிகளை திருப்பி அனுப்பி விட்டாள்...
யோகி மன்னனிடம் சொன்னார்,.. பார்த்தாயா.. தினசரி வருமானத்திற்கு கூலி வேலை தான் செய்ய வேண்டும்... சம்பாதித்து தர கணவனும் இல்லாமல் இரண்டு குழந்தைகளை காப்பாற்றும் பொறுப்போடும் இருக்கும் அந்த பெண்.. இரண்டு மூன்று நாட்களுக்கு மேல் ஒன்றுமே இல்லை எனினும் உழைக்கும் உறுதியோடு இருக்கிறார்.. ஆனால் நீயோ... பதினேழாவது தலைமுறைக்கு கவலை படுகிறாய்... இதுதான் உன் வியாதி.. இதை மற்றும் மருந்து உன்னிடம் தான் இருக்கிறது....

கதையின் நீதி..:- அப்படி புத்தி சொல்லும் யோகிகள் யாரும் இல்லாததால் தான் இன்று சிறைகள் நிரப்பும் அவசியம் ஏற்பட்டது...

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக