திங்கள், 27 ஜூலை, 2015

பூரான்



பூரான (பூரான்) ஆம்பளைங்க அடிக்க கூடாதாம்.... எங்கூர் பக்கம் சொல்வாங்க....

இதுக்கு என்ன காரணம்னு உள்ளூர் பாட்டி ஒருத்தியோட வாய புடிங்கினா.. அதுக்கு ஒரு கதை இருக்கு....

ஒரு மகா குடிகாரன்.. சந்தேகப்பேர்வழி.. தெனக்கிம் மூக்கு முட்ட குடிச்சுட்டு வந்து பொண்டாட்டிய போட்டு அடியோதனம்னு அடிப்பானாம்... அவளும் கெஞ்சி பாத்தா கதறி பாத்தா.... ஆனா பயபுள்ள கொஞ்சம் கூட ஈவு இரக்கமே இல்லாம அடிக்கிறது.... 

சாப்பிடாம கெடந்து பாத்தா.... பொறந்த வீட்டுக்கு போய் பாத்தா... ஆனா இவன் விடுறதா இல்ல.... பொறந்த வீட்டுக்கு போனா அங்கயும் வந்து குடி வெறியோட சண்டை போடறது....

பொறுத்து பொறுத்து பாத்துட்டு கடேசியா ஒரு முடிவுக்கு வந்தா.... முண்டச்சியா கிடந்தாலும் பரவாயில்ல... இந்தாள கொண்ணே போடணும்.. இவன்கூட வாழ முடியாதுன்னு ஒரு நா சோத்துல விஷம் வச்சிபுட்டா.....

எப்பயும் அடிக்கிறமாதிரியே அன்னிக்கும் அடிச்சான்.... மவனே.. இன்னிக்குதாண்டா நீ கடைசியா அடிக்க போறன்னு மனசுக்குள்ள கருவிகிட்டே இருந்தா.... அப்புறம் இவன் சாப்பிட வந்ததும் அந்த வெஷம் கலந்த சோத்த போட்டு குழம்ப ஊத்தினா..... அவனும் சாப்பிட ஆசையா பெசைஞ்சான்...

கூரைமேல இருந்து ஒரு பெரிய பூரான் பொத்துன்னு சோத்துமேல விழுந்துச்சாம்.... பய உஷாராயிட்டான்.... சோத்த கொண்ட கொட்டிட்டு பட்டினியாவே படுத்திட்டான்... ரெண்டாவது தடவையா வெஷம் வைக்க அவளுக்கும் மனசு வரல.... ஆனா.. மொத தடவ கெடுத்த அந்த பூரான் மேல ஆத்திரம் திரும்பிச்சாம்.... அதுல இருந்து பூரான எங்க கண்டாலும் பொம்பளைங்கதான் வெளக்கமாராலையே அடிப்பாங்களாம்....
உசுர காப்பாத்திவிட்டதால் ஆம்பளைங்க அந்த பூரான அடிக்க கூடாதாம்....

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக