திங்கள், 27 ஜூலை, 2015

நேரு குடும்பத்தை காவுகொடுக்கும் காங்கிரஸ்

"என் பாட்டி , தந்தையை போல் நானும் கொல்லப்படலாம் ..."


காங்கிரஸ் கட்சியின் எதிர்கால தலைமை என்ற நிலையில் இருக்கும் நேரு குடும்பத்தின் வாரிசு ராகுல் காந்தி அவர்களின் மேற் சொன்ன கூற்று ஒரு சாதாரண அரசியல் ஆதாயம் கருதிய பேச்சு அல்ல...



பஞ்சாப் மாநிலத்தை இந்தியாவில் இருந்து தனியாக பிரித்து காலிசிஸ்தான் என்ற தனிநாடு கோரி ஜர்னைல் சிங் பிந்த்ரன்வாலா தலைமையில் போராடிய பிரிவினை வாத குழு சீக்கியர்களின் புனித தளமாக போற்றப்படும் அமிர்தசரஸ் பொற்கோவிலுக்குள் தஞ்சம் புகுந்து ஆயுதங்களை பதுக்க... அவர்களை முறியடித்து அடக்கும் பொருட்டு 1984 ஆண்டு, ஜூன் 3 முதல் ஜூன் 6 வரையிலான ஒரு ராணுவ நடவடிக்கை எடுக்கப்பட்டது.. ஆபரேஷன் ப்ளு ஸ்டார் என்று பெயரிடப்பட்ட ராணுவ நடவடிக்கைக்கு உத்தரவிட்ட , அப்போதைய பிரதமராக இருந்த இரும்பு பெண்மணி இந்திராகாந்தி மீது சீக்கியர்கள் வன்மம் கொள்ள அந்த ராணுவ நடவடிக்கை காரணமாக இருந்தது...


சுதந்திர இந்தியாவின் பிரதமராக இருந்த ஜவஹர்லால் நேரு அவர்களின் மகள் என்ற தகுதியுடனும், தீவிர அரசியலில் ஈடுபட்டு இருந்ததாலும் பிரதமர் பதவிக்கு வந்த திருமதி. இந்திராகாந்தி தன்னுடைய ராஜ தந்திர நடவடிக்கைகளாலும், உறுதியான முடிவுகளாலும் ஆசிய பிராந்தியத்தில் ஒரு அசைக்க முடியாத சக்தியாக இந்தியாவை வழி நடத்தியதன் மூலம் உலகின் பார்வையில் ஒரு மாபெரும் தலைமையாக உருவெடுத்த இந்திரா காந்தி அவர்களை பழிவாங்க நினைத்தனர் கோபம் கொண்டிருந்த சீக்கியர்கள்...


இந்திரா காந்தி அவர்களுக்கான தனி பாதுகாவலர்களாக இருந்த சீக்கியர்களை அவர்கள் அந்த பழிவாங்கலுக்கு பயன்படுத்த திட்டமிட்டு, அதன் படி 1984 ம் ஆண்டு அக்டோபர் 31 ம் நாள் பீண்ட் சிங் , சத்வந்த் சிங் என்ற பாதுகாவலர்களால் அந்த திட்டம் நிறைவேற்றப்பட்டது...



பிரதமர் பதவியில் இருந்த இரும்பு பெண்மணி ரத்த சகதியாக மண்ணில் வீழ்ந்த போது ஸ்தம்பித்த இந்தியா உடனடியாய் ஒரு தலைமையை எதிர்பார்த்த நிலையில் அதற்காக முன்மொழியப்பட்டவர் திரு ராஜீவ் காந்தி.. அதன் பிறகு வந்த தேர்தலில் பிரதம வேட்பாளராக முன்னிறுத்தப்பட்ட ராஜீவ் காந்தியின் மீது மக்களுக்கு இருந்த, தாயாரை பறிகொடுத்தவர் என்ற இயல்பான இரக்கம் ஓட்டுக்களாக மாற பிரதம நாற்காலி திரு ராஜீவ் காந்தி அவர்களுக்கு உறுதி செய்யப்பட்டது...


இந்தியர்களுக்கே உரிய இரக்க குணம் அவரை பிரதம நாற்காலியில் அமர வைத்தாலும் கூட, தன்னுடைய தனிப்பட்ட திறமையின் மூலம் இந்தியாவை நல்லதொரு முன்னேற்ற பாதையில் வழிநடத்திய ராஜீவ் காந்தி அவர்கள், இனி வரும் காலங்களில் உலகை ஆளப்போவது தொலை தொடர்பு துறையும் அணுசக்தி துறையும்தான் என்பதை உணர்ந்து அதற்கான தேடல்களை நோக்கி தேசத்தை முடுக்கிவிட, தொலை தொடர்பிற்கான செயற்கைகோள்களை ஏவியதன் மூலம் விண்வெளியில் இந்திய ஆதிக்கம் நிலை நாட்டப்பட்டது...


மூன்றாவது தலைமுறையாக நேரு குடும்பத்தில் ஒருவர் நாட்டின் பிரதம நாற்காலியை உறுதியாய் அலங்கரிக்க அவர் சார்ந்திருந்த காங்கிரஸ் கட்சியின் இரண்டாம் மூன்றாம் மட்ட தலைவர்களுக்கும் ஒரு விரக்தி ஏற்பட்டதை தெளிவாகவே அறிய முடிந்தது.... அதோடு, விண்வெளியில் ஏற்கெனவே கோலோச்சிய மேற்கத்திய நாடுகளின் பொறாமை உணர்வும் ஒரு சேர, ராஜீவ் காந்தி அவர்களின் சில ராணுவ நடவடிக்கைகளால் பாதிக்கப்பட்ட ஒரு குழுவை உபயோகித்து 1991-ம் ஆண்டு மே 21.ல் உருத்தெரியாமல் துண்டுகளாய் சிதறடிக்கப்பட்டார் ...


அதன் பிறகு வந்த தேர்தலில் ராஜீவ் காந்தியின் மரணம் சம்பாதித்த இரக்கத்தை ஓட்டுக்களாக மாற்றினாலும் அந்த இரக்கத்தை நேரடியாக பெற முடியாத காங்கிரஸ் கட்சியின் இரண்டாம் மட்ட தலைவர்களால் ஒரு மெஜாரிட்டி அரசை அமைத்து திறம்பட செயல்படமுடியாமல் போனது.. அதற்கடுத்து வந்த தேர்தலில் ஆட்சி பீடத்தை பறிகொடுத்த பின்னரே, நேரு குடும்பத்தை தவிர்த்து நமது கட்சிக்கான ஆட்சி பீடம் இல்லை என்ற தெளிவை அடைந்த காங்கிரஸ் கட்சி மீண்டும் நேரு குடும்பத்தில் இருந்து ஒருவரை முன்னிறுத்த முடிவு செய்தது....
அதன்படியே ராஜீவ் காந்தியின் மனைவியாக வாழ்ந்த, அரசியல் அனுபவமில்லாத சோனியா காந்தி முன்னிறுத்தப்பட்டார்..... அவர்கள் கணக்கு பொய்த்துப்போக வில்லை.... கணவனை பறிகொடுத்தவர் என்ற இரக்கம் மீண்டும் ஓட்டுக்களாக மாற... மீண்டும் ஆட்சி பீடம்....
சுமார் பத்தாண்டுகள்...... ஆனால் இப்போது நாட்டில் நடக்கும் ஊழல்கள், திறமையற்ற நிர்வாகம் ஆகியவற்றால் ஒரு திறமையான ஆட்சி என்பது கேள்விக்குறியான நிலையில் மீதும் தேர்தலை சந்திக்க பயப்படும் காங்கிரஸ் கட்சி , ராஜீவ் காந்தியின் மரணம் கொடுத்த இரக்கத்தின் வீரியம் குறைந்த நிலையில் இப்போது ராகுலை முன்னிறுத்துகிறது....
ஆனால் இப்போது ராகுலை இந்திய மக்கள் ஏற்றுகொள்வார்கள் என்பது ஒரு மிகப்பெரிய கேள்விக்குறி..
அதோடு.... குஜராத் என்ற ஒரு மாநில அரசியலில் கோலோச்சும் நரேந்திர மோடியின் தலைமையை வெகுவாக எதிர்பார்க்க தொடங்கி இருக்கும் இந்திய மக்களை மீண்டும் இரக்கத்தின் பிடியில் சிக்கவைக்கும் நடவடிக்கையாக நேரு குடும்பத்தில் இன்னொருவர் பலிகொடுக்கப்படலாம் .....

அது சோனியா காந்தியாகவும் இருக்கலாம்... ராகுல் காந்தியாகவும் இருக்கலாம்.....
ராகுல் காந்தி அவர்களின் வாக்கு மூலம் அரசியல் காய்நகர்த்தல் என்பது உண்மை... ஆனால் அது அவரது நகர்த்தல் அல்ல .... யாரோ சிலரது நகர்த்தல்களின் மீதான பயம்......


பார்க்கலாம்... எதுவும் நடக்கலாம்....

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக