செவ்வாய், 28 ஜூலை, 2015

காதல் திருமணங்கள்



ஒரு தர்ம காரியத்திற்காக ஒருவர் ரூபாய் 5000 கொடுப்பதாக ஒப்புகொண்டார்... ஆனால் அந்த பணத்தை கொடுக்கும் முன்பாக எதிர்பாராதவிதமாக மரணமடைந்துவிட்டார்... லட்சாதிபதியான அவரின் ஒரே வாரிசிடம் மரணமடைந்தவரின் நண்பர்கள் இந்த தகவலை சொன்னார்கள்...

"உனது தந்தையார் ஒப்புக்கொண்ட நன்கொடையை நீ கொடுப்பதன் மூலம் அவரது புகழை காக்க வேண்டும்..."

"அப்படியா.... அதெல்லாம் எனக்குத்தெரியாது.. ஒரு சல்லிக்காசு கூட நான் தரமாட்டேன்..."

"நாங்கள் அவரின் நண்பர்கள்.... நீ அந்த பணத்தை கொடுக்கவில்லை என்றால் அவரது பெயரில் ஒரு குழு அமைத்து நன்கொடை வசூலித்து அந்த தொகையை கொண்டு உன் தந்தையார் ஒப்புக்கொண்ட தொகையை கொடுத்துவிடுவோம்.."

"அடடா.... அப்படியே செய்யுங்கள்.. அதற்கு அவரது வாரிசு என்ற உரிமையில் நான் தாராளமாக அனுமதி தருகிறேன்... ஆனால் மேலும் ஒரு கண்டிஷன்... நிர்ணயித்த தொகையான ரூபாய் 5000 க்கு மேல் வசூலானால் அந்த தொகையை எனக்கு கொடுத்துவிட வேண்டும்.. நான்தான் அவரது ஒரே வாரிசு..."

- மேற்கூறிய சம்பவம் திரு கல்கி ரா.கிருஷ்ணமூர்த்தி அவர்கள் தொடராக எழுதி "கல்கி"யில் வெளிவந்து பின் 1953 ல் வெளியான "அலை ஓசை" எனும் நாவலில் வருகிறது...

திரு கல்கி அவர்கள் சுமார் 60 ஆண்டுகளுக்கு முன்பு கற்பனை செய்த விஷயம் தான் இன்று கண்கூடாக அரங்கேறிக்கொண்டிருகிறது..... "காதல் திருமணங்கள்" என்ற பெயரில்.. அதாவது இறந்த பின்னும் கூட பெற்றோர்கள் சம்பாதித்து வைத்த சொத்து, புகழ் எல்லாம் வேண்டும்.. ஆனால் திருமணம் மட்டும் இவர்கள் உரிமை...

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக