திங்கள், 27 ஜூலை, 2015

மார்பகங்களின் மீதான ஈர்ப்பு



பெண்களின் மார்பகங்களின் மீது ஏன் ஆண்களுக்கு அதிகமான ஈர்ப்பு ஏற்படுகிறது..??

சிறுவயதில் தாய்ப்பால் கொடுக்கும் போது அழகு கெட்டு விட கூடாது என்றோ, வேலைப்பளு காரணமாகவோ, அடுத்த குழந்தை வரவாலோ (இப்படியான பல்வேறு காரணங்களால்) தாய்ப்பால் கொடுப்பதை குறிப்பிட்ட காலத்திற்கு பிறகு தாய்மார்கள் தவிர்ப்பார்கள்... கிராமங்களில் இதற்காக வேப்ப எண்ணெயை மார்புக்காம்புகளில் தடவுவார்கள்... அல்லது குழந்தையையும் தாயையும் சில காலம் பிரிப்பார்கள்.. அல்லது புட்டிப்பால் கொடுத்து பழக்குவார்கள்...

இம்மாதிரி அந்த குழந்தை தாமே மறுக்கும் வரை தாய்ப்பால் கொடுக்காமல் மறுக்கப்பட்டதால் குழந்தையில் மார்பகங்களின் மீது ஏற்பட்ட ஈர்ப்பு மூளையில் உறைந்து விடுகிறதாம்... பிறகு அந்த குழந்தை இளைஞனாக வளர வளர பாலின சுரப்புகள் சுரக்க தொடங்கியதும் அந்த ஈர்ப்பு வேறுமாதிரியாக உருவெடுக்கிறதாம்... (பெண் குழந்தைகளுக்கு இயல்பிலேயே மார்பக வளர்ச்சி ஏற்படுவதால் அவர்களுக்கு ஈர்ப்பு ஏற்படுவதில்லை)

குழந்தையில் மிக திருப்தியாக தாய்ப்பால் கொடுக்கப்பட்ட குழந்தைக்கு மார்பகங்களின் மீதான ஈர்ப்பு குறைவாகவே இருக்கிறதாம்...

இதை நான் சொல்லவில்லை.. உளவியல் ஆராய்ச்சிகள் சொல்கின்றன..

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக