திங்கள், 27 ஜூலை, 2015

நன்றி உணர்ச்சி



உறவுகள் யாருமற்று , தனக்காக கவலை பட, அன்பு செலுத்த, அழ... யாருமே இல்லாமல் தனிமையில் விடப்பட்ட மனிதன் கடவுள் இல்லை என்று சொன்னால் மட்டுமே அவன் நிஜமான கடவுள் மறுப்பாளன்... 
மனைவி, பிள்ளைகளை கோயிலுக்கு அனுப்பி விட்டு "கடவுள் இல்லை " என்று சொல்பவன் எப்படி பகுத்தறிவு கடவுள் மறுப்பாளன் ஆவான்??? உங்கள் மனைவி "நான் தீர்க்க சுமங்கலியாக இருக்க வேண்டும்" என்று கோயிலில் சாமி கும்பிட்டு வரலக்ஷ்மி விரதம் இருந்தால் அது யாருக்கு சேரும்??? உங்கள் மகன்/மகள் "என் குடும்பத்தில் என் அப்பா அம்மா தாத்தா, பாட்டியை பற்றி எல்லாம் கவலை இல்லை... "நான் சாமி கும்பிடுகிறேன்.. நான் மட்டும் நன்றாக இருக்க வேண்டும்.. என்னை மட்டும் காப்பாற்று" என்று சாமி கும்பிடுவார்களா???

நமக்காக செய்யப்படும் பிரார்த்தனைகளை விட அடுத்தவருக்காக பிரார்த்தனை செய்யும் போது கடவுள் உடனே கவனிக்கிறாராம்... உள்ளபடியே சொன்னால்.. நீங்கள் நீண்டகாலம் நிம்மதியாய் வாழ வேண்டும் என்று உங்கள் மனைவி- பிள்ளைகள் உங்களுக்காக பிரார்த்திக்கிறார்கள்... ஆனால்.. நீங்கள் அவர்களுக்காக பிரார்த்திக்கலாமே.. அதுதானே குறைந்தபட்ச நன்றி உணர்ச்சி?? நன்றி உணர்ச்சி இல்லாத ஒரு மனிதன்.. பகுத்தறிவாளன் மட்டுமல்ல.. மனிதனாக கூட இருக்க முடியாது.... மனிதனாக கூட இருக்க தகுதி இல்லாத நீங்கள் எப்படி பகுத்தறிவாளனாக இருக்க முடியும்???

நாய்களுக்கு கூட நன்றி உணர்ச்சி கொட்டிக்கிடக்கிறது... நன்றி இல்லாத நீங்கள்...................................???

உடனே இறைவனின் திருப்பாதங்களில் சரணடைந்து உங்கள் மனைவி பிள்ளைகளுக்காக பிரார்த்தியுங்கள்.. உங்களுக்கு நம்பிக்கை இல்லாவிட்டாலும்.. உங்களுக்காக பிரார்த்திக்கும் அவர்களுக்கு நன்றிக்கடன் செலுத்தவாவது....

மற்றவர்களுக்காக பிரார்த்திக்கும் உங்கள் நல்ல எண்ணத்த்தை கடவுள் உடனே நிறைவேற்றுவார்...

(படத்திலிருப்பவர் "இந்து கடவுள் மட்டும் இல்லை" எனும் பகுத்தறிவுவாதி தி மு க தலைவர் கருணாநிதி அவர்களின் மருமகள் காந்தி அழகிரி)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக