திங்கள், 27 ஜூலை, 2015

அது ஒரு அழகிய நிலாக்காலம்

அன்று :- 

வெளிநாடு சென்ற இருபது நாட்களுக்கு பிறகு....

"அம்மா.... லெட்டர் வந்திருக்கு.... ஓடியா.. ஓடியா... அப்பாகிட்ட இருந்து தான் வந்திருக்கு..."

"எங்க.... சீக்கிரம் பிரிச்சு படி......"

ம்ம்....
"அன்புள்ள மனைவிக்கு உன் அன்பை என்றும் மறவாத கணவன் எழுதுவது.... இங்க நான் நல்லபடியாக வந்து சேர்ந்துவிட்டேன்.... நம்ம ஊர் ராமசாமி அண்ணன் ரூமில தான் தங்கி இருக்கேன்... இன்னும் வேலைக்கு போகவில்லை... ரெண்டு மூணு நாள்ல போயிடுவேன்... என்னை பற்றி கவலை பட வேண்டாம்.....

அங்கு நீயும் பிள்ளைகளும் எப்படி இருக்கீங்க... எனக்கு உங்க கவலைதான் அதிகமா இருக்கு...... முத்துசாமி அண்ணன்கிட்ட சொல்லு... சம்பளம் வாங்கினதும் பணம் அனுப்புறேன்.. அவர் கடன கொடுத்துடலாம்.... புள்ளைய ஒழுங்கா படிக்க சொல்லு.... நீ பத்திரமா இரு....

மாடு கண்ணெல்லாம் ஒழுங்கா கட்டி போடு.. ராத்திரில அவுத்துக்கிட்டு போச்சுன்னா தேட முடியாது..... பக்கத்து வீட்டு பொம்பளை ஏதாச்சும் திட்டினான்னா நீ ஏதும் வாய கொடுக்காத... அவளோட உன்னால சண்டை போட முடியாது....

உங்க தம்பிய வரசொல்லி தேங்கா வெட்டு.... அள்ளுறதுக்கு ஆள் கூப்புட்டுக்க.. நீதனியா கெடந்து அள்ளாத..
நீ பத்ரமா இரு.... நான் வேலைக்கு போனதும் உனக்கு தகவல் சொல்றேன்..... என்னைபத்தி கவலை படாத,......
மற்றவை உன் மடல் கண்டு......"


இன்று :-

வெளிநாடு சென்ற நான்கு மணி நேரத்தில்....

"ஹல்லோ..... நான் வந்து இறங்கிட்டேன்..... நீ வீட்டுக்கு போயிட்டியா...."

"நாங்க இப்போதான் கும்பகோணம் வந்திருகோம்.. இன்னும் ரெண்டு மூணு மணிநேரம் ஆகும் வீட்டுக்கு போக......"

"அப்படியா.. சரி சரி...... பத்ரமா போங்க... நான் அப்புறம் போன் பண்றேன்...""""

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக