வியாழன், 29 ஜூன், 2017

நம்பி நாராயணன்

Image may contain: 1 person, beard

1994 ம் ஆண்டில் இதிய விண்வெளி ஆராய்ச்சி நிலையத்தில் கிரையோஜெனிக் ராக்கெட் தொழில்நுட்ப ஆராய்ச்சியில் ஈடுபட்டிருந்த திரு நம்பி நாராயணன் அவர்கள் அந்த ராக்கெட் தொழில்நுட்பத்தை அந்நிய நாட்டிற்கு விற்றுவிட்டதாக 1996 ம் ஆண்டில் கைது செய்யப்படுகிறார்..
சி பி ஐ இவரை சுமார் ஐம்பது நாட்கள் சிறையில் வைத்தது. 1998 ம் ஆண்டில் இவர் “குற்றமற்றவர்... இவர் எந்த ரகசியத்தையும் விற்கவில்லை” என்று விடுதலை செய்யப்படுகிறார்..


நடந்தது என்ன??

இந்திய தொழில்நுட்ப வளர்ச்சியை பொறுக்க முடியாத அந்நிய சக்திகள் , மரியம் ரஷீதா, பௌஸல் ஹசன் என்ற இரண்டு பெண் மாலத்தீவு இன்டலிஜென்ஸ் அலுவலர்கள் திரு நம்பி நாராயணன் அவர்கள் பயணம் செய்த விமானத்தில் பயணம் செய்து வேண்டும் என்றே பேச்சு கொடுத்துக்கொண்டிருந்துவிட்டு நகர்ந்து விடுகிறார்கள்... ஒரு சாதாரண சக பயணிகளாக நினைத்து அவர்களுடன் பேசிக்கொண்டிருந்ததை, அவர் ராக்கெட் விஞ்ஞான ரகசியங்களை விற்றுவிட்டார் “ என்று வீண் பழி சுமத்தி, அவருக்கு தேச துரோக முத்திரை குத்தப்பட்டு, அதோடு ஓரங்கட்டப்பட்டார்..


அவர் தேசதுரோகி என்பதை விடாமல் செய்தியாக்கிய பத்திரிகை மற்றும் காட்சி ஊடகங்கள், விசாரணைக்கு பிறகு அவர் நிரபராதி என்ற செய்தியை ஒரு ஓரமாய் வெளியிட்டு தங்கள் ஜனநாயக கடமையை நிறைவேற்றிவிட்டன..



எந்த தவறுமே செய்யாமல், தேசத்திற்கு விசுவாசமாய் இருந்த ஆற்றல் மிக்க விஞ்ஞானி திரு நம்பி நாராயணன், திறமையை இந்தியநாட்டிற்கு பயன்படுத்திய ஒரே காரணத்திற்காக தேசதுரோகி பட்டத்துடன் இன்று எங்கோ ஒரு மூலையில் ஒடுங்கிக்கிடப்பது நம்மில் எத்தனை பேருக்கு தெரியும்??
நமக்கு தெரிந்ததெல்லாம் இன்று எவர் மீது வெளிச்சம் பாய்ச்சப்படுகிறதோ... அவர்தான்.... நாம் என்னதான் அறிவாளிகள் போல நம்பிக்கொண்டு எல்லோரையும் விமர்சித்துக்கொண்டு இருந்தாலும்... நம்மை எல்லாம் ஆட்டி வைப்பவர்கள் பெரும்பலம் மிக்க ஊடகங்களே....


ஊடக வெளிச்சத்தின் பின்னால் ஓடும் செம்மேறி ஆட்டு கூட்டம் தான் நாம்....

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக