வியாழன், 29 ஜூன், 2017

மதுவிலக்கு- கேட்பது எம் உரிமை

திரும்பவும் ஆட்சிக்கு வந்த உடன் மதுவிலக்கை படிப்படியாக அமலுக்கு கொண்டு வருவேன் என்று செல்வி ஜெயலலிதா தன்னுடைய தேர்தல் பிரச்சார கூட்டத்தில் அறிவித்திருக்கிறார்... மேலும் , மதுவிலக்கை பற்றி பேச திரு.கருணாநிதி மற்றும் தி மு க விற்கு அருகதை இல்லை எனவும்.. ஏனென்றால்... அமலில் இருந்த மதுவிலக்கை நீக்கியதே திரு கருணாநிதி தலைமையிலான தி மு க தான் என்றும் அவர் கூறி இருக்கிறார்....
Image may contain: indoor
சும்மா இருப்பாரா கருணாநிதி அவர்கள்.... படிப்படியாக மதுவிலக்கு என்பது ஏமாற்று வேலை என்பதாகவும், அதை நம்ப முடியாது எனவும் அறிக்கை விட்டிருக்கிறார்... மேலும், கடந்த ஆட்சிகாலத்தில் ஏன் மதுவிலக்கை அமல் படுத்தவில்லை எனவும்... சசி பெருமாள் போன்ற மதுவிலக்கு போராளிகளின் போராட்டத்தை ஏன் கண்டுகொள்ளவில்லை எனவும் கேள்விக்கணைகளை தொடுத்திருக்கிறார்...மேலும்.. 1971ம் ஆண்டு மதுவிலக்கை விலக்கி விட்டு மீண்டும் தி மு க ஆட்சியிலேயே 1974 ல் மதுவிலக்கை கொண்டு வந்ததாகவும் சொல்லி இருக்கிறார்...

அவர்கள் விடும் எந்த அறிக்கையிலும் "கமென்ட்" காலம் இல்லாததால்.. என்போன்ற ஓரளவுக்கு பழைய வரலாறுகள் தெரிந்த , கோபப்படக்கூடிய சாமான்யர்கள் அவர்களை கேள்வி கேட்க முடிவதில்லை என்றாலும்..... திரு மார்க் அவர்கள் கொடுத்திருக்கும் இந்த பேஸ்புக் வசதி மூலம் நம் ஆதங்கத்தை பதிவு செய்யலாம்....

2001 ல் ஆட்சிக்கு வந்த செல்வி ஜெயலலிதா தனியார் வசமிருந்த மதுபான கடைகளை டாஸ்மாக் என்ற அரசு நிறுவனத்தின் மூலம் அரசே நடத்தும் என்று அறிவித்திருந்தார்.... நிச்சயம் அப்போது அந்த மதுக்கடைகளில் உயிரை காக்க கூடிய அமிர்தம் விற்கப்படவில்லை.... அப்போதும் உயிரை குடிக்க கொடிய மதுதான் விற்பனையானது....
அதனை நடைமுறைபடுத்தியவரோ , அதனை விடாமல் தொடர்ந்து கடைபிடித்தவரோ.... இப்போது “நாங்கள் மதுவிலக்கு கொண்டுவருவோம்” என்பது ஆட்சியில் தொடர வேண்டும் என்பதற்காகவோ – ஆட்சியை கைப்பற்றி விட வேண்டும் என்பதற்காகவோ நடத்தும் நாடகமில்லாமல் வேறென்ன????


அந்த வேஷதாரிகளிடம் கேட்க சாமான்யனிடம் நிறைய கேள்விகள் இருந்தாலும்.... இப்போது ஐந்து கேள்விக ள் மட்டும்...


சாமான்யனின் கேள்வி 1: தற்போதைய ஆட்சி காலத்தில் ஏன் மதுவிலக்கை கொண்டுவர வில்லை என்று கேள்விகளை வாரி வீசும் திரு கருணாநிதி அவர்கள் தான் 2006 முதல் 2011 வரை ஆட்சியில் இருந்தார்... இவரது ஆட்சியில் அதை தடை செய்திருக்கலாமே அய்யா????


சாமான்யனின் கேள்வி 2 : சசி பெருமாள் என்ற ஒரு போராளியை பற்றி இப்போது கவலை படுகிறீர்களே... இழவு வீட்டிலும் கூட நமக்கென்ன லாபம் கிடைக்கும் என்ற சிந்தனையுடன் ஓடி அவருக்கு பாடை தூக்க அரசியல் கட்சிகள் வரிசை கட்டி நின்றனவே... அவர் உயிரோடிருந்து போராடிய போதெல்லாம் எந்த கட்சிக்காரர்களும் கால் காசுக்கு கூட அவரை மதிக்க வில்லையே அய்யா...??


சாமான்யன் கேள்வி 3 : இதே மதுவிலக்கு கோரிக்கையை முன்னிறுத்தி செல்வி நந்தினி என்ற ஒரு சட்டக்கல்லூரி மாணவி மூன்று ஆண்டுகளுக்கும் மேலாக போராடி வருகிறாரே நியாயன்மாரே.... சசி பெருமாள் பாடை தூக்க ஓடிய களவாணிகள் ஏன் உயிரோடிருக்கும் செல்வி நந்தினிக்கு ஆதரவு தர போகவில்லை.... உயிரோடிருப்பவர்கள் போராடி, அவர் பின்னால் சென்றால் அது உங்கள் கௌரவ இழுக்காகி விடுமா??

சாமான்யனின் கேள்வி 4: தமிழ்நாட்டில் மொத்தம் 6823 சில்லறை விற்பனை கடைகளும் 41 கிடங்குகளும் இருக்கின்றன... சற்றேறக்குறைய 25000 நேரடி பணியாளர்களும், சுமார் 100000 க்கும் மேலான மறைமுக பணியாளர்களும் இருக்கிறார்களே... அந்த மதுக்கடைகளை திடீரென / கொஞ்சம் கொஞ்சமாக மூடினால் இந்த 125000 பணியாளர்களின் குடும்பங்கள் நடுத்தெருவுக்கு (??) வந்து விடுமே.... (எல்லா பயலும் சக்கையா சம்பாதிச்சுட்டான்.... ஆனா எங்க வாழ்வாதாரம் போச்சுன்னு நீலிக்கண்ணீர் விடுவானுங்க )
அதற்கு மாற்று ஏற்பாடுகள் என்ன செய்ய போகிறீர்கள்..??


சாமான்யனின் கேள்வி 5 : இந்த மதுக்கடைகளுக்கு “சரக்கு” சப்ளை செய்பவர்கள் எல்லாம் அமெரிக்காவிலோ-அண்டார்டிகாவிலோ இருபவர்களோ... இல்லை... குடிசை தொழில் செய்யும் அல்லக்கைகளோ இல்லை... உங்கள் கட்சியிலேயே இருக்கும் அமைச்சர் பெருமக்களும் அதிகாரம் மிக்கவர்களும் தான்.... எந்த கட்சி ஆட்சிக்கு வந்தாலும் இந்த முதலைகள் எந்த விதத்திலும் பாதிக்கப்படாமல் அவர்களிடமே கொள்முதல் செய்துதான் இதுவரை பாதுகாப்பு கொடுத்திருக்கிறீர்கள்... இப்போது அவர்கள் எல்லாம் மகாத்மா ஆகி விடுவார்களா...?? அல்லது திருநீறு, குங்குமம் விற்கும் புனிதர்கள் ஆகி விடுவார்களா???


எப்போதும் போல நீங்கள் பதில் சொல்ல மாட்டீர்கள்.. ஆனாலும் கேள்விகள் கேட்பது எம் உரிமை....கேட்டுக்கொண்டே இருப்போம்...

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக