வியாழன், 29 ஜூன், 2017

கோரிக்கை

No automatic alt text available.

பொதுவாக வெப்ப நாடுகளில் கல்வி கூடங்களுக்கு வெய்யில் அதிகமாக இருக்கும் காலங்களில் விடுமுறை விடப்படும்... இந்த வெய்யில் காலத்தை கணக்கில் கொண்டே கல்வியாண்டு இறுதி தேர்வு நடத்தப்படும்... இந்தியாவில் வெய்யில் காலம் என்பது ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் இருக்கும்... இதனால் , ஆண்டுத்தேர்வுகள் மார்ச் மற்றும் ஏப்ரல் தொடக்கத்தில் இருப்பது போல கல்வித்திட்டம் வகுக்கப்பட்டிருக்கிறது....


வளைகுடா நாடுகளில் இந்த விடுமுறை ஆகஸ்ட்-செப்டம்பர் மாதங்களில் இருக்கும்... வளைகுடா நாடுகளில் வெய்யில் அதிகமாகும் காலம் மட்டுமே உண்டு. ஆனால் இந்திய கால நிலை அப்படி இல்லை.. அதிக மழை மற்றும் அதிக வெய்யில் காலம் உண்டு....



வெயில் காலங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை விடுவதால் பிள்ளைகள் விளையாடவும், ஊர் சுற்றவும் என்று வெய்யிலில் திரிந்துகொண்டிருப்பார்கள்... அப்போது அவர்களை வெய்யிலில் சுற்றாமல் கட்டுப்படுத்த பெற்றோர்களின் பாடு திண்டாட்டமாகி விடும்...


மழை காலத்திலோ பள்ளிகள் இயங்கிக்கொண்டிருக்கும்... இந்த மழை காலத்தில் பள்ளிக்கு செல்வது என்பது அத்தனை எளிதான விஷயமில்லை... நனைய வேண்டும்... இதனால் ஜலதோஷம்- காய்ச்சல் போன்ற நோய்கள் வரும்.... துவைத்து போட்ட சீருடைகள் காயாது.... வாகனகள் ஒழுங்காக வராது.. சாலைகள் சேதாரமாகி பாதுக்காப்பற்ற பயணம் செய்ய நேரும்... எல்லாவற்றிற்கும் மேலாக இந்த ஆண்டை போல பெருமழை பெய்தால் வீடுகளை விடுத்து பள்ளி கட்டிடங்களில் தஞ்சம் புக வேண்டி இருக்கும்.. வானிலை அறிக்கைகளை அனுசரித்து அடிக்கடி விடுமுறை விட வேண்டி இருக்கும்... இப்படி மழை காலத்தில் பிள்ளைகளும்- ஆசிரியர்களும் படும் கஷ்டங்களை சொல்லிக்கொண்டே போகலாம்...


மாறாக, இந்த விடுமுறை காலத்தை கோடைக்கு பதிலாக, மழை காலத்திற்கு.. அதாவது நவம்பர்- டிசம்பர் மாதங்களுக்கு மாற்றி அமைத்தால் மழை காலங்களில் பிள்ளைகளும்-ஆசிரியர்களும் படும் துயரம் குறையும்.. மழையில் நனைந்து நோய்-வாய்ப்படும் பிரச்சினையோ, சீருடைகள் காயவில்லை- புத்தகங்கள் நனைந்து விட்டது.. வாகணம் பள்ளத்தில் இறங்கி, சேற்றில் மாட்டிக்கொண்டது போன்ற பிரச்சினைகள் இல்லவே இல்லை





மேலும், கோடை காலத்தில் பள்ளிகள் இயங்கினால் பிள்ளைகள் வெய்யிலில் சுற்ற மாட்டார்கள்....

இதுபற்றி அரசின் பள்ளி கல்வித்துறை பரிசீலனை செய்ய வேண்டும்... இது ஒரு சாமான்யனின் கோரிக்கை.... பார்க்கலாம்....

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக