வியாழன், 29 ஜூன், 2017

ஆற்றங்கரை ஆக்கிரமிப்புகள்



No automatic alt text available..




மேலும் அங்கு ஏற்கெனவே குடியிருந்து வீடுகளை இழந்தவர்கள் மீண்டும் அங்கே குடியேறாமல் தடுத்து , சென்னையில் கிடக்கும் எத்தனையோ புறம்போக்கு இடங்களில் அவர்களுக்கு வீட்டு மனைகளை ஒதுக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்திருக்கிறார்...
அடைமழை அகற்றிய அடையாறு ஆக்கிரமிப்பு இடங்கள் மறுபடியும் ஆக்கிரமிகப்படாமல் தடுக்கப்பட வேண்டும்.... என்ற கோரிக்கையை தமிழக அரசியல்வாதிகளிலேயே முதன் முறையாக அரசுக்கு விடுத்திருக்கிறார் எதிர்க்கட்சி தலைவர் திரு விஜயகாந்த் அவர்கள்....


இது முற்றிலும் வரவேற்கப்பட வேண்டிய கோரிக்கை...அதே நேரம் வழக்கம் போல நமக்குள் இருக்கும் சாமான்யன் சில கேள்விகளை முன்வைக்கிறார்... 

திரு கருணாநிதி அவர்களின் ஆட்சிகாலத்தில் ஜாதி- மத பிரச்சினைகளுக்கு தீர்வு கொடுக்கும் முயற்சியின் ஒரு புள்ளியாக "சமத்துவபுரம்" என்ற ஒரு திட்டத்தை கொண்டு வந்தார்கள்... வெவ்வேறு ஜாதியினருக்கு அங்கு இலவசமாக வீட்டு மனைகளை ஒதுக்கி அதில் குடியமர்த்தினார்கள். ஆனால் அந்த சமத்துவ புறங்களின் இப்போதைய நிலையை பற்றி யாருக்கேனும் தெரியுமா???


யாருக்கெல்லாம் அங்கே வீட்டு மனை ஒதுக்கப்பட்டதோ, அவர்களில் 70 சதவிகிதம் பேர் அங்கு குடியிருக்க வில்லை... அந்த இடத்தை விற்றுவிட்டு தனுடைய பழைய வீட்டு மனைக்கோ , அல்லது வேறு இடங்களுக்கோ சென்று விட்டார்கள்...இதுதான் சமத்துவ புறங்களின் இன்றைய நிலை..

அதே போல, இப்போது ஆற்றங்கரையோர ஆக்கிரமிக்ப்பு வீடுகளை இழந்தவர்களுக்கு அரசு புறம்போக்கில் வீடு ஒதுக்கினால் என்ன ஆகும்.. ஒன்று அல்லது இரண்டு வருடத்தில் அதை வந்த விலைக்கு விற்றுவிட்டு வேறொரு ஆற்றங்கரையிலோ- ஏரிக்கரையிலோ ஒரு குடிசையை போட்டு, கொடி கட்டி பட்டா கேட்டு போராடுவார்கள்... அதுதான் நடக்கும்...

ஒரு நடுத்தர வர்க்கத்தை சேர்ந்தவன் நிச்சயம் இப்படி ஏறி-கூவம் கரைகளில் குடிசை போட்டு குடியேறவே மாட்டான்... கடனை- உடனை வாங்கியோ, குருவி சேர்ப்பது போல சேர்த்தோ நிச்சயம் ஒரு வீட்டை வாங்கி விடத்தான் போராடுவானே தவிர ஏரிக்கரை- கூவம் கரைகளை ஆக்கிரமிக்கவே மாட்டான்...


அப்படியானால் யார் ஆக்கிரமிப்பது??? இதை சொல்லித்தெரிய வேண்டிய அவசியமில்லை.... எல்லோரையும் சமமாக நடத்த வேண்டும்.. மனிதர்களுக்கும் ஏற்றத்தாழ்வு கொடாதே என்பதெல்லாம் வெற்று வாதம்.... முதலில் கீழ் மட்டத்தில் இருப்பவர்களின் சிந்தனையில் மாற்றம் வர வேண்டும்... இவர்கள் எந்த ஜாதியானாலும் சரி....

அப்படி ஆக்கிரமிப்பவர்களை அரசு வெளியேற்றினால் நிச்சயம் அவர்களின் ஓட்டு நமக்கு கிடைக்கும் என்று மற்ற கட்சிகள் சப்போர்ட் செய்வார்கள்.. இப்போது எதிர் கட்சி தலைவர் சொல்லி இருக்கிறார்... நிச்சயம் ஆளும் கட்சி கண்டுகொள்ளாது.... கடந்த ஆண்டு உத்திரகான்ட் மாநிலம் வெள்ளத்தில் மிதந்த போது தமிழகம் நிதியை வாரி வழங்கியது.... அங்கே சுற்றுலா சென்றவர்களை அரசு சிறப்பு விமானத்தில் மீட்டு வந்தது... நாம் அப்போது நினைக்கவில்லை.... சென்னை இப்படி நிதி உதவி கேட்டு, நிவாரணம் கேட்டு கையேந்தும் என்று.... ஆனால் இன்று கையேந்த வேண்டிய அவசியம் ஏற்பட்டு விட்டது...


நிச்சயம் நாளை ஏற்படாது என்பதற்கு எந்த உத்திரவாதமும் இல்லை.... ஆகவே இப்படியான ஆக்கிரமிப்புகளை ஆக்கிரமிப்பவர்கள் தவிர்க்க வேண்டும்... அரசும்- பொது மக்களும் கூடி தடுக்க வேண்டும்...!!!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக