வியாழன், 29 ஜூன், 2017

எனக்கு நஷ்டமில்லை... அவருக்கு மாமகிழ்ச்சி

Image may contain: one or more people, plant, tree, outdoor and indoor

எங்கள் பகுதியில் பெரும்பாலும் சொந்த நிலங்களில் விவசாயம் செய்பவர்கள்.... பெரிய மிராசுதார்- பண்ணையார் எபெக்ட் இல்லை என்றாலும் குட்டி பண்ணையார் - குட்டி மிராசுதார் எபெக்ட் இருக்கும்..

இந்த நிலங்களில் விவசாய கூலிகளாக பணி செய்ய ராமநாதபுரம், புதுக்கோட்டை மாவட்டங்களில் இருந்து வந்த வெளியூர் ஆட்களும், உள்ளூரிலேயே இருக்கும் "...................." இன மக்களும் வருவார்கள்..


எங்கள் பகுதியில் இருக்கும் அந்த குட்டி மிராசுதார்கள் வயசு வித்தியாசமின்றி அவர்களை பெயர் சொல்லியும், சமையங்களில் "வாடா" "போடா" என்ற பதங்களை உபயோகித்தும் பேசுவார்கள்...



எனக்கு இது என்னவோமிகுந்த மன சங்கடத்தை உருவாக்கும்.... விபரம் புரியாத வயதில் நானும் கூட சிலரை அப்படி அழைத்தது உண்டு.... பின்னாளில் இது பற்றி யோசித்த வேளையில் என் தவறு எனக்கு புரிய.... என்னை விட வயதானவர்களை "அண்ணே" என்றும்... வயதில் குறைந்தவர்களை "வாப்பா... போப்பா.." என்றும் பேச தொடங்கினேன்.... நம்முடன் நெருக்கமாக இருப்பவர்களை சமையங்களில் வாடா-போடா என்று அழைப்பதும் உண்டு... அதில் அதிகாரம் இருக்காது.. அன்பு மட்டுமே இருக்கும் என்பதால்.. அதை அவர்கள் வருத்தமாக நினைக்க மாட்டார்கள் என்பது என் எண்ணம்...


அப்படி ஒரு ".........................." இனத்தை சேர்ந்த என்னை விட வயதில் மிக மிக மூத்தவரான ஒருவரிடம் எங்கள் ஊர் டீக்கடையில் பேசும்போது... "அண்ணே" என்று அழைத்து பேச..... அங்கே இருந்த சில குட்டி பண்ணையார்கள் என்னை வித்தியாசமாய் பார்த்தார்கள்... அதிலும் ஒருவர்.. உரிமையுள்ள சொந்தக்காரர் தான்.... என்னிடம் நேராகவே கேட்டும் விட்டார்... "என்ன மாப்பிள்ளை... அவன அண்ணேன்னு கூப்பிடறீங்க" என்று... (சம்மந்தப்பட்டவர் அவ்விடத்தில் இருந்து அகன்றதும் தான் கேட்டார் )



அவருக்கு நான் சொன்னேன்.... அவர் அனுபவம்...என்னுடைய வயசு.... நான் அண்ணே.. என்று அவரை கூப்பிட்டதால் எனக்கு எந்த நஷ்டமும் இல்லை... ஆனால் அவரது முகத்தில் எவ்வளவு சந்தோசம்... பார்த்தீங்களா.....
அண்ணேன்னு கூப்பிட வயசு மட்டும் தானே வேணும்... வேறென்ன வேணும்?? செலவு செய்து தானம் கொடுத்து எல்லாம் நம்மால் மற்றவரை மகிழவிக்கும் வசதி நமக்கு இல்லாமல் இருக்கலாம்... ஆனால் இப்படியான வார்த்தைகள் மூலம் மற்றவரை சந்தோஷப்படுத்த முடியுமென்றால்.. அதில் என்ன தயக்கம்???

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக