வியாழன், 29 ஜூன், 2017

பகுத்தறிவு

நிகழ்வில் இல்லாத ஒன்றை இருப்பதாக கற்பனை செய்துகொண்டு , அதில் ஒன்றி வாழ தலைப்படும் வாழ்க்கை முறை "விர்சுவல் வாழ்க்கை முறை" எனப்படும்...
Image may contain: 1 person
உதாரணமாக, மதுரையில் இருக்கும் ஒரு பெண்ணும், சென்னையில் இருக்கும் ஒரு ஆணும் வாட்ஸ் அப், பேஸ்புக் போன்ற இணைய தொடர்பில் டைப் செய்து காதலிக்கும் போது, நான் உனக்கு ஒரு முத்தம் தருகிறேன் என்று சொல்வதும்.... உடனே எதிர் பக்கம் இருப்பவர் உதட்டை சுழிப்பதும்... கடிக்காத.. கடிக்காத ... வலிக்குது என்று குரல் கொடுப்பதும்... விர்சுவல் வாழ்க்கை...
முத்தம் அங்கே கொடுக்கப்படவோ,கடிக்கப்படவோ.. உதடு வலிக்கவோ இல்லை.... அது இருவருக்குமே தெரியும்... ஆனாலும் முத்தம் கொடுக்கப்படுவதாகவும்- கடிக்கப்படுவதாகவும், வலிப்பதாகவும் மனம் நம்புகிறது...

இப்படியான வாழ்க்கை முறையோ நோக்கி சமகால சமூகம் நகர்ந்துகொண்டிருக்கிறது... இது ஒருவிதமான மன நோய்....

இப்படித்தான் பெரிய பெரிய இந்துக்கோயில்களில் சில சம்பவங்கள் நடந்துகொண்டிருகின்றன... திருப்தியில் குபேரனுக்கு வட்டி கட்டுவதும், திருச்செந்தூரில் சூரசம்ஹாரம் நடை பெறுவதும்...


பெருமாளாகவும், குபேரனாகவும்,முருகனாகவும்,சூரனாகவும் சிங்காரிக்கப்பட்ட பொம்மைகளை வைத்து நடத்தும் ஒரு நாடகம்.... அதற்காக இவைகள் எல்லாமே கற்பனை என்று நான் வாதிட விரும்பவில்லை.... நடந்திருக்கலாம்... மறுக்கவில்லை... அதே போன்று ஒரு நிகழ்வை பொம்மைகளை வைத்து இப்போது நடத்தி பார்க்கிறார்கள் மனிதர்கள்...

ஆனால்.. அதனை பார்த்துவிட்டு அந்த பொம்மைகளை முருகனாகவும்- சூரனாகவும் நினைத்து பரவசப்படுவதுதான் " விர்சுவல் "

சமகால சமூகம் எப்படி விர்சுவல் வாழ்க்கை உண்மையில்லை என்று தெரிந்தும் கூட, அதை நம்புகிறதோ... அதே போன்ற ஒரு நம்பிக்கைதான் குபேரனுக்கு வட்டி கட்டுவதையும் , சூரா சம்ஹாரத்தையும் உண்மை என்று நம்புகிறார்கள் பக்தர்கள்... கிட்டத்தட்ட இதுவும் ஒருவகையான மனநோய் தான்....


இம்மாதிரியான மனநோய்களுக்கு ஆட்படாமல் சிந்திப்பதுதான் பகுத்தறிவு...

அதே நேரம்....அப்படி ஒரு சம்பவமே நடக்கவில்லை.... அவைகள் எல்லாமே கற்பனை.. என்றெல்லாம் ஒரு அறுபது ஆண்டுகளை மட்டுமே சராசரி வாழ்நாளாக கொண்ட மானிடர்கள் சொல்வது அதை விட முட்டாள்தனம்... அப்படிப்பட்டவர்கள் தான் தற்கால பகுத்தறிவாளர்கள்... அப்படிப்பட்ட நவீன பகுத்தறிவாளர்களை அழைத்து உன் முப்பாட்டன் வாழ்வில் என்னெல்லாம் நடந்தது என்று தெரியுமா.... என கேட்டால் பேந்த பேந்த விழிப்பார்கள்.... இன்னும் சிலருக்கு முப்பாட்டன் பெயரே கூட தெரிந்திருக்காது....


வழக்கம் போலவே எவரோ சொல்வதை நம்பி அரசியல் செய்யும், பக்திப்பரவசமிடும் முட்டாள் கூட்டத்திற்கும், இந்த பகுத்தறிவாளர் கூட்டத்திற்கும் எந்த வித்தியாசம் இல்லை...

அவ்வளவுதான்....

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக